``வேலை நிறுத்தத்தைக் கைவிடுங்கள்!” - ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் | Minister thangamani press meet in namakkal

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (01/03/2019)

கடைசி தொடர்பு:12:00 (01/03/2019)

``வேலை நிறுத்தத்தைக் கைவிடுங்கள்!” - ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

``ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும். அரசு நிச்சயமாக கனிவோடு அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்கும்” என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தங்கமணி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா அலுவலகம் அருகே இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யும் இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் நிதியிலிருந்து ரூ.2.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்தது. பணி முடிவடைந்ததை தொடர்ந்து சுற்றுச்சுவர் திறப்பு விழா நடந்தது.

இவ்விழாவில் கலந்துகொண்ட தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி சுற்றுச்சுவரை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், `கோடைக்காலத்திற்கும் குறைந்த மின் அழுத்தத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கோடைக்காலத்தில் மின் தேவை 15,000 மெகா வாட் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு தேவையான அளவிற்கு மின் உற்பத்தி இருப்பதால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது. மின்துறையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வருகிற 6-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். கஜா புயல் நேரத்தில் அவர்கள் எந்த அளவிற்கு வேலை செய்தார்கள் என்பதை நானும் கண்கூடாகப் பார்த்தேன். 

தங்கமணி

அவர்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். அவரும் பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளார். எனவே, ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வரவேண்டும். அரசு நிச்சயமாக கனிவோடு அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்கும். உயர்மின்கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவின்படி விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடத்த அரசும் அதிகாரிகளும் தயாராக உள்ளோம்' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close