சிவகங்கையில் டாஸ்மாக் கடை அருகே வாலிபர் வெட்டிக் கொலை - போலீஸ் தீவிர விசாரணை | Youngster murdered in Sivagangai

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (01/03/2019)

கடைசி தொடர்பு:14:20 (01/03/2019)

சிவகங்கையில் டாஸ்மாக் கடை அருகே வாலிபர் வெட்டிக் கொலை - போலீஸ் தீவிர விசாரணை

சிவகங்கையில் வாலிபர் ஒருவர் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொலை

சிவகங்கையிலிருந்து காளையார்கோயில் செல்லும் வழியில் ராகினிப்பட்டி என்னும் இடத்தில் முந்திரிக்காடு உள்ளது. இக்காட்டுப் பகுதியில் உள்ள தோப்பிற்குள் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகின்றது. இதன் அருகில், நேற்று இரவு முந்திரி மரத்தின் அடியில்  வாலிபர் ஒருவர் கழுத்தில் வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஏ.டி.எஸ்.பி மங்களேஸ்வரன், டிஎஸ்பி அப்துல்கபூர், இன்ஸ்பெக்டர்கள் அழகர், சீராளன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டவர், யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. இவர் ஜீன்ஸ் பேன்ட், டீசர்ட் அணிந்திருந்தார். அவர் கையில் ஜெயராமன், வசந்தி எனப் பச்சை குத்தப்பட்டிருந்தது. மோப்ப நாய் லைகா வரவழைக்கப்பட்டது. லைகா அருகில் உள்ள மதுபான கடைக்குச் சென்று அங்கிருந்து காளையார்கோயில் மெயின் ரோட்டில் வந்து நின்றது. கொலை செய்யப்பட்டவர் பையில் இருந்த ஏடிஎம் கார்டு மூலம் அவர் குறித்து விவரங்களை போலீஸார் சேகரித்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மார்ச் -1 ம் தேதி காலை போலீஸார் நடத்திய விசாரணையில் கொலையானவர் மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் எனத் தெரியவந்தது. மேலும் இக்கொலை குறித்து மூன்று நபர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி தேடிவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close