''எனக்கு விருது கொடுக்கணும்னு நினைச்ச இதயங்களுக்கு நன்றி'' - நடிகை காஞ்சனா தேவி | ''I would like to say thanks, whoever wants to give this award

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (01/03/2019)

கடைசி தொடர்பு:14:35 (01/03/2019)

''எனக்கு விருது கொடுக்கணும்னு நினைச்ச இதயங்களுக்கு நன்றி'' - நடிகை காஞ்சனா தேவி

லைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு விருது பெற்றவர்களின் பட்டியலில்,  2013 - ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதைப் பெற்றிருப்பவர்களில், பழம்பெரும் நடிகை காஞ்சனா தேவியும்  ஒருவர்.  நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, கலைமாமணி விருது அவருடைய மனதில்  என்ன மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று கேட்டோம். 

நடிகை காஞ்சனா

PC: 1.bp.blogspot.com

'' 'காதலிக்க நேரமில்லை' படத்தில் என்னுடன் நடித்த ராஜஶ்ரீ, நேத்தே எனக்கு போன் பண்ணி, கலைமாமணி விருது கிடைச்சிருக்கிற விஷயத்தைச் சொல்லிட்டாங்க.  இன்னிக்கு காலையில சச்சு போன் பண்ணி வாழ்த்து சொன்னாங்க. பிலிம் சேம்பரிலிருந்தும் தகவல் சொன்னாங்க. விருது கிடைச்ச விஷயத்தைக் கேள்விப்பட்டப்போ மனசுக்குள்ள ஒரு நிறைவு வந்துச்சும்மா. ஏன்னா, சிலருக்கு என்னை நினைவிருக்கும்; சிலருக்கு நினைவிருக்காது. அதுக்குக் காரணம், ஜெனரேஷன் கேப். அதை ஒண்ணும் குறை சொல்ல முடியாது. ஆனா, எனக்கு இந்த விருதைக் கொடுக்கணும்னு சில இதயங்கள் நினைச்சது இல்லையா? அந்த இதயங்களுடைய அன்புக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த உலகத்தைவிட்டு கிளம்பறப்போ இந்த விருதைக் கொண்டு போக முடியாது. ஆனா, எனக்கு மரியாதை செய்யணும்னு நினைச்ச இதயங்களோட அன்பு என்னோட  ஆன்மாவோட கலந்திருக்கும். அதனால, எனக்கு இப்படியொரு விருதைத் தரணும்னு நினைச்ச இதயங்களுக்கு என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்'' என்றார் உணர்ச்சிபூர்வமாக.   


[X] Close

[X] Close