மனநலம் பாதித்தவரின் வயிற்றில் இருந்து நாணயம், சிம்கார்டு உள்ளிட்ட 40 பொருள்கள் அகற்றம்! | Unique Endoscopy Surgery was done by Rajiv Gandhi Government Hospital

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (01/03/2019)

கடைசி தொடர்பு:16:00 (01/03/2019)

மனநலம் பாதித்தவரின் வயிற்றில் இருந்து நாணயம், சிம்கார்டு உள்ளிட்ட 40 பொருள்கள் அகற்றம்!

னநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றுக்குள் இருந்த 40 வகையான பொருள்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக  அகற்றப்பட்டது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

52 வயதான ஜெயக்குமார், சென்னை அயனாவரம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயக்குமாருக்கு மனநலம் முன்னேற்றத்துக்கான சிகிச்சைகள் அளிக்கும் வகையில் பரிசோதனை மேற்கொண்டபோது, அவருடைய வயிற்றில் சாவி, செயின், நாணயம், காந்தம், சிம்கார்டு உள்ளிட்ட 40  பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதனால், அவர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு இரைப்பை மற்றும் குடல் மருத்துவத்துறையில் அனுமதிக்கப்பட்டு, எண்டாஸ்கோப்பி என்னும் நவீன உள்நோக்கு கருவி மூலம் வயிற்றில் உள்ள  பொருள்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். தற்போது, ஜெயக்குமாரின் உடல்நிலை தேறி வருகிறது. 

சாவி, காந்தி, செயின்

இதுகுறித்து மருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் வெங்கடேஸ்வரன் பேசுகையில்,

``ஜெயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தவறுதலாக இந்தப் பொருள்களை விழுங்கியிருக்கிறார். உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருக்காவிட்டால் குடலில் ரத்தப்போக்கு  அல்லது நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம். 

வயிற்றில் தேங்கியுள்ள பொருள்களை அகற்றுவது சிக்கலானது. இதனால் எண்டாஸ்கோப்பி என்னும் நவீன உள்நோக்கு கருவியைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமலேயே,  வயிற்றில் உள்ள பொருள்களை அகற்றினோம். இந்தச் சிகிச்சையில் பக்கவிளைவுகள் இருக்காது. சிகிச்சை முடிந்ததும் நீண்ட நாள்கள்  மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை.அறுவை சிகிச்சையைவிட செலவும் குறைவு. வயிற்றில் உள்ள அனைத்துப் பொருள்களும் அகற்றப்பட்டதையும்  பரிசோதனை மூலம் உறுதி செய்தோம். 

இந்தச் சிகிச்சை முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு சில லட்சங்கள் வரை செலவாகும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close