`விவசாயிகள் சந்திப்பு பரப்புரை பயணம்’ - தேனியிலிருந்து தொடங்கினார் பி.ஆர்.பாண்டியன் | p.r.pandiyan starts Farmers meeting campaign

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (01/03/2019)

கடைசி தொடர்பு:16:10 (01/03/2019)

`விவசாயிகள் சந்திப்பு பரப்புரை பயணம்’ - தேனியிலிருந்து தொடங்கினார் பி.ஆர்.பாண்டியன்

பாராளுமன்றத் தேர்தல் 2019: பிரச்னைகளும் தீர்வுகளும், விவசாயிகள் சந்திப்பு தமிழகம் தழுவிய பரப்புரை பயணம், தேனியிலிருந்து இன்று தொடங்கப்பட்டது.

பயணம்

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபத்திலிருந்து துவங்கியுள்ள இந்தப் பிரசார பரப்புரைப் பயணத்தை தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையேற்று நடத்துகிறார். இது தொடர்பாக பி.ஆர்.பாண்டியன் பேசும்போது, ``தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னையில் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல் 2019 -  விவசாயிகளுக்கான முன்னோட்ட நிழல் தேர்தல் அறிக்கையை முன்வைத்து விவசாயிகள் சந்திப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டிருக்கிறோம்.

இன்று லோயர்கேம்பில் ஆரம்பித்துள்ள இப்பயணமானது வழி நெடுங்கிலும் விவசாயப் பெருமக்களைச் சந்தித்துவிட்டு வரும் 8-ம் தேதி தஞ்சைக்குச் சென்றடையும். சென்னை தவிர அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விவசாயிகளைச் சந்தித்து பரப்புரை பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார். முல்லைப்பெரியாறு பாசனப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close