`மோடி பின்னால் தமிழகமே இருக்கிறது' - கன்னியாகுமரி மேடையில் உருகிய எடப்பாடி! | Cm edappadi praising modi for palakot attack

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (01/03/2019)

கடைசி தொடர்பு:10:27 (16/03/2019)

`மோடி பின்னால் தமிழகமே இருக்கிறது' - கன்னியாகுமரி மேடையில் உருகிய எடப்பாடி!

பிரதமர் மோடி இந்திய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார். தமிழ்நாடும் அவர் பின்னால் இருக்கிறது எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் மத்திய அரசு திட்டங்கள் தொடக்க விழா நடந்து வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் மதியம் 2.26 மணிக்கு மேடைக்கு வந்தனர். முதலாவதாக மதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான பணி முடிக்கப்பட்ட சாலை மற்றும் பணங்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான பணி முடிக்கப்பட்ட சாலைகளை திறந்துவைத்தார் மோடி. மேலும், குமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களைத் திறந்து வைத்தார். மேலும், மதுரை முதல் செட்டிக்குளம் வரையும், செட்டிக்குளம் முதல் நத்தம் வரையிலான சாலை மற்றும் கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா மற்றும் போக்குவரத்து மியூசியம் உள்ளிட்ட திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டினார்.

விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``கன்னியாகுமரியில் முக்கடல் மட்டும் அல்ல மூன்று மதங்களும் சங்கமிக்கின்றன. அதிகம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரி. மீனவர்களுக்காகத் தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களைக் கொண்டுவந்துள்ளது. விவசாயத்துக்காகத் தடுப்பணைகள் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒகி புயல் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தலை முறியடித்த பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கடலில் காணாமல்போகும் மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கக் கன்னியாகுமரியில் ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறேன். பிரதமர் மோடி இந்திய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார். தமிழ்நாடும் அவர் பின்னால் இருக்கிறது" என்றார்.


[X] Close

[X] Close