``கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் ரூ.5,000 அபராதம்" - விருதுநகர் கலெக்டர் அதிரடி | Virudhunagar collector warning handloom makers

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (01/03/2019)

கடைசி தொடர்பு:16:40 (01/03/2019)

``கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் ரூ.5,000 அபராதம்" - விருதுநகர் கலெக்டர் அதிரடி

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்பவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கைத்தறி தொழிலைப் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் நலனை பாதுகாக்கவும் மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, கைத்தறி ரகங்களான பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி மற்றும் சேலை, கட்டுக்கட்டி சாயமிடப்பட்ட நூலால் உற்பத்தி செய்யப்பட்ட சேலை, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், உடைத்துணி, கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சத்தார் ஆகிய ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது சட்டவிரோதம்.

இந்த ரகங்களை முழுவதும் கைத்தறியில் மட்டும் தான் உற்பத்தி செய்ய வேண்டும். கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்பவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையோ அல்லது விசைத்தறி ஒன்றுக்கு ரூ.5,000 அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


[X] Close

[X] Close