`ஊழலை மறைக்கவே அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணி' - கரூரில் சஞ்சய் தத் அதிரடி! | BJP, AIADMK and PMK are united to hide corruption says congress secretary Sanjay Dutt

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (01/03/2019)

கடைசி தொடர்பு:17:15 (01/03/2019)

`ஊழலை மறைக்கவே அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணி' - கரூரில் சஞ்சய் தத் அதிரடி!

``ராணுவ வீரர்களின் அளப்பறிய தியாகத்தை அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க தலைமை பயன்படுத்திக் கொள்கிறது" என்று காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் கருத்து தெரிவித்துள்ளார்.

 சஞ்சய் தத்

கரூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் ஆயத்தக் கூட்டம் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சஞ்சய் தத் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 சஞ்சய் தத்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் தத், ``ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசில் லாபத்துக்காக பா.ஜ.க பயன்படுத்திக் கொள்கிறது. `இந்தப் போரால் கர்நாடகாவில் 22 இடங்கள் கிடைக்கும்' என்று  எடியூரப்பா கூறியதை மோடி கண்டிக்கவில்லை. காஷ்மீரில் அண்மையில் தீவிரமான தாக்குதலை பா.ஜ.க தேர்தலுக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளது. நரேந்திர மோடி ஆட்சி, பணக்காரர்களுக்கு மட்டுமே கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டது. ஊழலை மறைக்கவே அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ஒன்று சேர்ந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, ஈ,பி,எஸ், ஓ.பி.எஸ் ஆட்சியை டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் இயக்கிக்கொண்டிருக்கிறார். பா.ஜ.க ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது" என்று தெரிவித்தார்.


[X] Close

[X] Close