``கலைமாமணி விருதை முதல்வருக்கு காணிக்கையாக்குகிறேன்!" - நிர்மலா பெரியசாமி | News Reader nirmala periyasamy talk about kalaimaamani awards

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (01/03/2019)

கடைசி தொடர்பு:17:40 (01/03/2019)

``கலைமாமணி விருதை முதல்வருக்கு காணிக்கையாக்குகிறேன்!" - நிர்மலா பெரியசாமி

தமிழ்மொழியின் மீது எனக்கு இருந்த பற்று உணர்வு நிறைய பேருக்குத் தெரியாது. கடந்த, முப்பத்தியொரு வருஷமா தமிழ்மொழிக்கான வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான மேடைகள்ல பேசியிருக்கேன்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினால் 1968-ம் ஆண்டிலிருந்து கலைமாமணி விருது வழங்கப்பெற்று வந்தன. கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த விருதுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், விடுபட்ட ஆண்டுகளின் வரிசைப்படி அந்தந்த ஆண்டு சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார்கள். அதில், 2018-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பட்டியலில் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமியும் ஒருவர். மகிழ்ச்சியில் திளைத்திருந்த அவரிடம் பேசினேன். ``1988-ம் வருடம் தூர்தர்ஷனில் செய்தி அறிவிப்பாளராக சேர்ந்தேன்.

நிர்மலா பெரியசாமி

நான் செய்தி வாசிக்கிற பெண்ணாகத்தான் பலபேருக்குத் தெரியும். ஆனா, தமிழ்மொழியின் மீது எனக்கு இருந்த பற்று நிறைய பேருக்குத் தெரியாது. கடந்த, முப்பத்தியொரு வருஷமா தமிழ்மொழிக்கான வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான மேடைகள்ல பேசியிருக்கேன். அதுமட்டுமில்லாம அரசியல்ரீதியான கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் எழுநூறு மேடைகள்ல பேசியிருக்கேன். இதற்கெல்லாம் கிடைச்ச அங்கீகாரமாத்தான் இந்த விருதைப் பாக்குறேன். என்னோட சேர்ந்து விருதுபெற்ற மற்றவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். எனக்கு கிடைத்த இந்த கலைமாமணி விருதை அண்ணன் எடப்பாடியார்க்கு காணிக்கையாக்குகிறேன்" என்றார். 


[X] Close

[X] Close