``அடுத்த கால் நூற்றாண்டு தி.மு.க ஆட்சிதான்!" -துரைமுருகன் நம்பிக்கை | Dhurai Murugan speech in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (02/03/2019)

கடைசி தொடர்பு:09:55 (02/03/2019)

``அடுத்த கால் நூற்றாண்டு தி.மு.க ஆட்சிதான்!" -துரைமுருகன் நம்பிக்கை

``கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் இந்தத் தேர்தல் இரு கட்சிகளுக்குமே வாழ்வா, சாவா பிரச்னைதான். தி.மு.க வெற்றிபெற்றால், அடுத்த கால் நூற்றாண்டு நம்முடைய ஆட்சிதான் தொடரும்’’ என்று துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

துரைமுருகன்

வேலூரில் 1-ம் தேதி நடைபெற்ற தி.மு.க அவசர செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``வேலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. வேலூர், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிகளுடன் சேர்த்து திருவண்ணாமலை தொகுதி வெற்றிக்காகவும் நாம் இணைந்து உழைக்க வேண்டும். இரு பெறும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெற உள்ள இந்தத் தேர்தல், இரு கட்சிகளுக்குமே வாழ்வா.. சாவா.. என்பதைப் போன்ற பிரச்னைதான். ஒரு பக்கம் மோடியும், அ.தி.மு.க-வும் கூட்டணி அமைத்துள்ளனர். நாம் ஜனநாயக ரீதியில் கூட்டணி அமைத்துள்ளோம். 

அ.தி.மு.க வெற்றிபெற்றால், அவர்களின் ஆட்சி நீடிக்கும். தி.மு.க வெற்றிபெற்றால், அடுத்த 25 ஆண்டுகள் தி.மு.க ஆட்சிதான் தொடரும். டெல்லியைக் கைப்பற்றிவிடலாம்.ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் பணத்தை கொட்டி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதெல்லாம் நடக்காது. வேலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்காக 99 சதவீதம் முயற்சி செய்கிறேன். சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை வெற்றிக் கனியாக மாற்றி தலைவர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கவேண்டும்’’ என்றார். அதைத்தொடர்ந்து, ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டிக் கொண்டாடிய தி.மு.க-வினர், 1,667 பேருக்குப் பிரியாணி வழங்கினர். 


[X] Close

[X] Close