`தேர்தலில் போட்டியிட ரூ.40 கோடி தேவைப்படுது; தூத்துக்குடியில் நான் நிற்கல!'- சரத்குமார் ஓப்பன் டாக் | I do not contest in Thoothukudi parliament constituency says sarathkumar

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (02/03/2019)

கடைசி தொடர்பு:10:34 (16/03/2019)

`தேர்தலில் போட்டியிட ரூ.40 கோடி தேவைப்படுது; தூத்துக்குடியில் நான் நிற்கல!'- சரத்குமார் ஓப்பன் டாக்

”தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிடவில்லை. சமத்துவ மக்கள் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடுகுறித்து வரும் 5-ம் தேதி அறிவிக்கப்படும்” என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்  சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சரத்குமார்

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த, சமத்துவ மக்கள் கட்சித்  தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தலில் ஒருவர் நிற்க வேண்டும் எனச் சொன்னாலே, ரூ.30 கோடி முதல் 40 கோடி வரை பணம் தேவைப்படும் என்ற நிலை உள்ளது. அப்படி ஒரு நிலை இருக்கும் வரை இந்த நாடு, ஜனநாயக நாடாக இருக்காது. தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிடவில்லை. சமத்துவ மக்கள் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடுகுறித்து வரும் 5-ம் தேதி அறிவிக்கப்படும்.

பா.ஜ.க-வைப் பொறுத்த வரை தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளதாகத் தெரிகிறது. அ.தி.மு.க மற்றும் பா.ம.க கூட்டணியைப் பொறுத்த வரை நிலைப்பாடு எடுத்தால், தெளிவாக எடுக்க வேண்டும். அரசியலைப் பொறுத்த வரையில் விமர்சனம் செய்யலாம். ஆனால் தரக்குறைவாகத் திட்டிவிட்டு கூட்டணிக்காக ஒன்றுசேர்ந்து எப்படி அருகில் உட்கார்ந்து பேச முடிகிறது என்பதுதான் தெரியவில்லை. நானாக இருந்தால், இப்படி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க மாட்டேன்.

சமூக வளைதளங்களில் அன்புமணி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசிய பேச்சுக்கள், அன்று-இன்று என குறிப்பிடப்பட்டு விமர்சனம், மீம்ஸ்கள் வைராலாகிவருகின்றன. கூட்டணி நிலைப்பாட்டில் தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து” என்றார்.

     

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close