``அதுதான் கலைஞரின் பாசம்!” -கல்லூரி மாணவிகள் மத்தியில் கனிமொழி நெகிழ்ச்சி | Women should live with self confidence and mentality to restore their rights says kanimozhi

வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (02/03/2019)

கடைசி தொடர்பு:14:44 (02/03/2019)

``அதுதான் கலைஞரின் பாசம்!” -கல்லூரி மாணவிகள் மத்தியில் கனிமொழி நெகிழ்ச்சி

``என்னால் எதையும் சாதிக்க முடியும் என்கின்ற தன்னம்பிக்கை முதலில் நமக்குள் வர வேண்டும். சோதனை வரும்போது, அதை எதிர்த்து நிற்க வேண்டும். தங்கள் உரிமயை மீட்டெடுக்க தன்னம்பிக்கையுடன் கூடிய மனவலிமையோடு வாழ வேண்டும்” என தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், மர்காஷிஸ் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி, “பெண்களுக்கு எத்தனையோ எதிர்ப்புகள், பிராச்னைகள், கஷ்டங்கள் வரலாம். ஆனால், பெண்களுக்கு அடக்கமும் தன்னம்பிக்கையும் நிச்சயம் தேவை. என்னால் எதையும் சாதிக்க முடியும் என்கின்ற தன்னம்பிக்கை முதலில் வர வேண்டும். சோதனை வரும்போது அதை எதிர்த்து நிற்க வேண்டும். பெண்கள், தங்களின் உரிமையை மீட்டெடுக்க தன்னம்பிக்கை மற்றும் மனவலிமையோடு வாழ வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, மாணவிகளிடம் கலந்துரையாடல் நடத்திய அவர், மாணவிகளின் பல கேள்விகளுக்கு உற்சாகமாகப் பதில் கூறினார். அப்போது ஒரு மாணவி, “உங்க அப்பா, உங்க மேல எந்த அளவுக்கு அன்பு வச்சிருந்தாங்க மேடம்..?” எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்துப் பேசிய கனிமொழி, “ஒரு முறை டெல்லிக்கு இரவு நேரத்தில் விமானத்தில் பயணம் செய்ய நேரிட்டது. அப்போது, தலைவர் அவர்கள் எனக்கு போன் செய்து, “ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு விமானத்துல பயணம் செய்யுற...” எனக் கேட்டார். “அவசர வேலை காரணமாக இரவே செல்லவேண்டியிருக்கிறது. எனச் சொன்னேன். விமானத்தில் டெல்லிக்கு போய்ச் சேர நள்ளிரவு ஒரு மணி ஆனது.

நான் இறங்கியதும் எனக்கு வந்த முதல் போன், தலைவரிடமிருந்து வந்தது. ”என்னம்மா, பத்திரமா டெல்லி சென்று இறங்கிவிட்டாயா?” எனக் கேட்டார். ”இறங்கிவிட்டேன்” என நான் சொன்ன பிறகுதான் தலைவர் தூங்கச் சென்றார். அதுவரை தூங்காமல் கண் விழித்துக் கொண்டிருந்தார். அவர்தான் தலைவர் கலைஞர். அதுதான் அவரது பாசம்” எனப் பதில் கூறியதும், அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close