`அ.தி.மு.க-வின் சூழ்ச்சி எங்களுக்குத் தெரியுது!’’ - தங்க தமிழ்ச்செல்வன்  | "not Alliance to admk "says thanga tamilselvan

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (02/03/2019)

கடைசி தொடர்பு:10:36 (16/03/2019)

 `அ.தி.மு.க-வின் சூழ்ச்சி எங்களுக்குத் தெரியுது!’’ - தங்க தமிழ்ச்செல்வன் 

தங்க தமிழ்ச்செல்வன் 

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு உறுதியாகிவிட்ட நிலையில், தே.மு.தி.க மட்டும் இழுபறியில் நீடித்து வருகிறது. அதே நேரத்தில் அந்தக் கட்சியுடனான கூட்டணி இன்று எப்படியும் முடிவாகிவிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க  ஓரளவு கூட்டணிப் பலத்தைக் கட்டமைத்துவிட்ட நிலையில் தி.மு.க மட்டும் இன்னும் கூட்டணிக் கட்சிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது.

இதற்கிடையில் தி.மு.க கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம் பெறப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலரும் இதைக் கூறி வருகின்றனர். இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கொள்கைப்பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசியபோது, ``அ.தி.மு.க அமைச்சர் பேசிவருது முற்றிலும் தவறவான தகவல். நாங்கள் எப்படி தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க முடியும். இப்படியான ஒரு கருத்தை வெளியிட்டால்தான் வாக்கு வங்கியைப் பலப்படுத்த முடியும் என்ற சூழ்ச்சியில் பேசி வருகிறார்கள். நாங்கள் தனித்துப் போட்டியிடுவதற்காகத் தயாராகி வருகிறோம். இன்னும் 10 நாள்களில் எங்களுடைய கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு வெளியாகும்’’ என்றார் .  


[X] Close

[X] Close