`மீண்டும் மோடிதான் பிரதமர்!’ - செல்லூர் ராஜு நம்பிக்கை | bjp - admk alliance will win parliament election says sellur raju

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (02/03/2019)

கடைசி தொடர்பு:10:38 (16/03/2019)

`மீண்டும் மோடிதான் பிரதமர்!’ - செல்லூர் ராஜு நம்பிக்கை

``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிதான் வெற்றிபெறும். மீண்டும் மோடிதான் பிரதமர்’’ என்று கூறினார் அமைச்சர் செல்லூர் ராஜு.

 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் செல்லூர் ராஜூ

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வேளாண்மைத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இயந்திரங்களும் வாகனங்களும் வழங்கினார்.

விழாவில் பேசுகையில், ``ஜெயலலிதா வழியில் விவசாயிகளின் நலன் கருதி பல திட்டங்களை முதல்வர் மற்றும் துணை முதல்வர் முயற்சியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, விவசாயத்தின் கஷ்டங்களை உணர்ந்து கிராமங்களில் விவசாயிகளுக்குக் களம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். விவசாயிகளுக்கு என ஏகப்பட்ட  பயன்பெறும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்பட்டது’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, ``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிதான் வெற்றிபெறும் மீண்டும் மோடிதான் பிரதமர். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் கிடையாது. 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று, மக்கள் நலத் திட்டங்களைத் தமிழகத்துக்குப் பெற்றுத் தரும். அதற்கான வெற்றிக் கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். வெற்றி பெறுவோம்’’ என்று தெரிவித்தார்.


[X] Close

[X] Close