``மோடி அரசை அகற்றுவதே கனவு'' - தூத்துக்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேச்சு! | 400 Delta district farmers dreamed of killing the Modi government says p.r.pandian

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (02/03/2019)

கடைசி தொடர்பு:10:42 (16/03/2019)

``மோடி அரசை அகற்றுவதே கனவு'' - தூத்துக்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேச்சு!

``டெல்டா மாவட்டங்களில் 400 விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமான மோடி அரசை அகற்றுவதே தமிழக விவசாயிகளின் கனவாக உள்ளது” என அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக்குழு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பி ஆர் பாண்டியன்

நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதை முன்னிட்டு, `விவசாயிகளுக்கான நிழல் தேர்தல் அறிக்கை' குறித்த பரப்புரைக்காக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, தமிழகம் முழுவதும் பயணம் செய்து வருகிறது. தேனியில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்திலிருந்து கடந்த மார்ச், 1-ம் தேதி தொடங்கிய இந்த பிரசாரப் பயணம், வரும் 8-ம் தேதி தஞ்சாவூரில் முடிவடைகிறது. கன்னியாகுமரி, நெல்லை வழியாக இன்று துாத்துக்குடி வந்தடைந்தது. தூத்துக்குடி பழைய  பேருந்து நிலையம் முன்பு நோட்டீஸ் கொடுத்து பரப்புரை செய்த அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக்குழு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர். இதில் மாவட்டச் செயலாளர் காந்திமதிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக பரப்புரை குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், ``மத்திய அரசின் ரூ.6,000 ஊக்கத் திட்டம் ஒரு மோசடி திட்டம். விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்கான மோடியின் நாடகம்தான் இது. முதலில் 18 கோடி விவசாயிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் எனச் சொல்லப்பட்டது. அதில், தமிழகத்தில் 16  லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றனர். ஆனால், தற்போது, இந்தியா முழுவதும், 1 கோடி பேரும், தமிழகத்தில், 1.25 லட்சம் பேரும் மட்டுமே பயனாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர் அறிவித்ததில் 10 சதவிகித பயனாளிகள் கூட பயன்பெறமுடியாத இந்தத் திட்டம், மோடியின் மோசடித் திட்டம்.

தமிழகத்தில் தற்போது பல பகுதிகளிலும் அறுவடை நடைபெற்று வருகிறது. பயிர் சாகுபடிக்கான எந்தத் தேவையும் இல்லாத சமயத்தில் இந்தத் தொகை வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வாக்குகளை பெறும் வகையில்தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈ.பி.எஸ்.,சின் பாதுகாப்பில் தமிழகத்துக்குள் நுழைந்து வாக்குகளைப் பெறலாம் என மோடி நினைக்கிறார், அது நடக்காது. தமிழக வாக்காளர்கள் மோடிக்கு தக்கப் பாடம் புகட்டுவார்கள் .டெல்டா மாவட்டங்களில் 400 விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமான மோடி அரசை அகற்றுவதே தமிழக விவசாயிகளின் கனவாக உள்ளது.” எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close