`பேரழிப்பு திட்டங்களை ரத்து செய்யுங்கள்!’ - தஞ்சையில் நம்மாழ்வார் முகமூடியுடன் நடத்தப்பட்ட பேரணி | Rally held against Tn Disaster plans near Thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (03/03/2019)

கடைசி தொடர்பு:07:30 (03/03/2019)

`பேரழிப்பு திட்டங்களை ரத்து செய்யுங்கள்!’ - தஞ்சையில் நம்மாழ்வார் முகமூடியுடன் நடத்தப்பட்ட பேரணி

காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் தஞ்சாவூரில் பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் நம்மாழ்வார் முகமூடி அணிந்து பேரணியில் பங்கேற்றது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பேரணி

தஞ்சாவூரில் பேரழிப்புக்கு எதிரான பேரியியக்கத்தினர் சார்பில் அதன் தலைவர் லெனின் தலைமையில் தமிழ் மக்கள் மீது கொண்டுவரப்படும் பேரழிப்பு திட்டங்களை ரத்து செய்யக் கோரியும், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வராமல் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் மற்றும் விவசாயிகள், விவசாயப் பெண்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பேரணி

தொல்லிகாப்பியர் சதுக்கத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தது. பேரணியில் மாணவர்கள் மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதாகைகளைப் பிடித்து வந்தனர். மாணவிகள் நம்மாழ்வார் முகமூடி அணிந்து வந்தனர்  இது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவை ஏற்படுத்தும் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் இதை மத்திய, மாநில அரசுகள் உடனே செய்ய வேண்டும் என கோஷமிட்டபடியே வந்தனர் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

பொதுக்கூட்டம்

காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், விளை நிலங்களைப் பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் டெல்டா பகுதியில் செயல்படுத்தக்கூடாது, அனுமின், அனல்மின் திட்டங்களைக் கை விடவேண்டும், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும், 8 வழி சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முக்கியமாக வலியுறுத்தியே  பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close