‘பிரதமர் நிகழ்ச்சியில் காவலர்கள் தடுத்தது பெரிய விஷயம் அல்ல!’- தளவாய் சுந்தரம் கூல் ரீப்ளே | Thalavai Sundaram Speaks about Yesterday Incident

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (03/03/2019)

கடைசி தொடர்பு:10:45 (16/03/2019)

‘பிரதமர் நிகழ்ச்சியில் காவலர்கள் தடுத்தது பெரிய விஷயம் அல்ல!’- தளவாய் சுந்தரம் கூல் ரீப்ளே

தே.மு.தி.க.வை கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடக்கிறது. கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் அதுகுறித்து அறிவிப்பார்கள் என தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

தளவாய்சுந்தரம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி பெருங்கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரி மாவட்டம் வருகைதந்து மாவட்ட மக்கள் மற்றும் மீனவர்களுக்கு அம்மா அரசு செய்த திட்டங்களை விளக்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மீனவர்கள் இருக்கிறார்கள். மீனவர்களுக்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரியில் பிரதமர் மற்றும் முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு வீரர்கள் என்னை தடுத்தது பெரிய விஷயம் அல்ல. ஏனென்றால் பாதுகாப்பிற்கு நின்ற காவலர்கள் மாறிக்கொண்டே இருந்ததால் அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணி.  இந்த கூட்டணி வெற்றிபெற்று மக்களுக்கு சேவை செய்ய மாநில அரசும், மத்திய அரசும் கடமைப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வை கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடக்கிறது. கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் அதுகுறித்து அறிவிப்பார்கள். டாஸ்மாக் டெண்டரில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால் அமைச்சர் டெண்டரை நிறுத்திவைத்துள்ளார். சட்டப்படி டாஸ்மாக் டெண்டரில் யாருடைய தலையீடும் இல்லை. முறைப்படி டெண்டர் நடக்கும்" என்றார்.


[X] Close

[X] Close