அமைச்சர் முயற்சியால் 72 ஆண்டுகளுக்குப் பின் மின்சார வசதி! - சிறுமலை மக்கள் மகிழ்ச்சி | Sirumalai village people got electricity after 72 years

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (03/03/2019)

கடைசி தொடர்பு:12:20 (03/03/2019)

அமைச்சர் முயற்சியால் 72 ஆண்டுகளுக்குப் பின் மின்சார வசதி! - சிறுமலை மக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது சிறுமலை. இங்குத் தாளக்கரை, சிறுவாட்டு காடு ஆகிய கிராமங்களுக்கு இதுவரை மின் இணைப்பு இல்லை. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மின் இணைப்பு கேட்டு அரசிடம் பல முறை முறையிட்டுள்ளனர். அடர்ந்த காடுகளுக்கு இடையே இந்த கிராமங்கள் உள்ளதால் வனத்துறை அனுமதி வழங்குவதில் சிக்கல் இருந்தது.

மின்சார வசதி

அத்துடன் இந்தப் பகுதியில் மின் விபத்து ஏற்பட்டால் வனவிலங்குகள் பாதிக்கப்படலாம் என்பதால் அனுமதி வழங்க வனத்துறையினர் தாமதப்படுத்தினார். இந்த இரண்டு கிராமங்களிலும் 260 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பல ஆண்டுகளாக இருட்டில் வசித்து வருகிறார்கள். மின் வசதி இல்லாததால் மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் முயற்சியால் இந்த கிராமங்களுக்கு மின்வசதி கொடுக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த கிராமங்களுக்கு மின் வழித்தடம் அமைக்கும் பணியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று துவக்கி வைத்தார்.

2.97 கோடியில் இந்தப் பணி நடக்க இருக்கிறது. வனப்பகுதியில் 5.5 அடி குழி தோண்டி கேபிள் வழியாக மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 72 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத கிராமத்திற்கு மின்சாரம் வசதி ஏற்படுத்துவதற்காக முயற்சி செய்த வனத்துறை அமைச்சர் சீனிவாசனை கிராம மக்கள் பாராட்டினர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய் உட்பட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close