சுட்டி விகடனின் கோவை ஸ்பெஷல் போட்டியில் கலக்கிய சுட்டிகளுக்கு பரிசு...! | Chutti vikatan function in coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (03/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (03/03/2019)

சுட்டி விகடனின் கோவை ஸ்பெஷல் போட்டியில் கலக்கிய சுட்டிகளுக்கு பரிசு...!

சுட்டி விகடன் நடத்திய ‘கோவை 200’ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசளிப்பு விழா கோவை நிர்மலா கல்லூரியில் நடைபெற்றது.

சுட்டி விகடன்


தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷலின் ஒரு பகுதியாக ‘கோவை 200’ இணைப்பிதழ் சுட்டி விகடனுடன் வழங்கப்பட்டது. இணைப்பிதழிலிருந்து OMR ஷீட் முறையில் நடத்தப்பட்டத் தேர்வில்,, கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நிர்மலா கல்லூரியில் நேற்று நடந்தது.

இதில், சந்திராயன் , மங்கள்யான் பணித்திட்டங்களுக்கு தலைவராக இருந்த விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை , இந்தியாவின் விண்வெளி ஆய்வுகளின் அனுபவங்களைச் சுட்டிகளுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், கோவையின் பெருமைகளை அடுக்கிய அவர், சுட்டிகளின் அசத்தலான கேள்விகளுக்கு பொறுமையாகப் பதிலளித்து விழாவினை கலகலப்பாக்கினர். சுட்டிகள் தங்கள் பாடல் திறமைகளையும் வெளிப்படுத்தி அசத்தினர்.

சுட்டி விகடன்

பள்ளிகள் வாரியாக சுட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுட்டிகளை ஊக்கப்படுத்திய பள்ளி ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 


[X] Close

[X] Close