`இப்படித்தான் அப்போதும் கூறினார்கள்; ஆனால் என்னாச்சு....' - அ.தி.மு.கவை சாடிய டி.டி.வி தினகரன்! | ttv dinakaran slams admk - pmk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (03/03/2019)

கடைசி தொடர்பு:09:01 (04/03/2019)

`இப்படித்தான் அப்போதும் கூறினார்கள்; ஆனால் என்னாச்சு....' - அ.தி.மு.கவை சாடிய டி.டி.வி தினகரன்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லம் கட்டக் கூடாது, அவர் படத்தை  சட்டமன்றத்தில் மாட்டக் கூடாது என்று சொன்ன பா.ம.கவுடன் கூட்டணி வைத்துள்ளதைத்தான் மெகா கூட்டணி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் என்று அ.தி.மு.கவைக் கடுமையாக தாக்கிப் பேசினார் டி.டி.வி.தினகரன். 

தினகரன்


பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்த டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``மக்கள் ஆதரவு இல்லாததினால் மற்ற கட்சிகள், மதியாதார் தலைவாசல் தேடி கூட்டணிகளை நோக்கி ஓடுகிறார்கள். நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். அதனால் அமைதியாக பணியாற்றி வருகிறோம். ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லம் அமைக்கக் கூடாது, ஜெயலலிதாவின் படம் திறக்கக்கூடாது எனச் சொன்ன பா.ம.கவுடனும், தமிழகத்துக்கு மோசமான திட்டங்களைக் கொண்டு வந்த பா.ஜ.கவுடனும் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது.

அன்புமணி பாணியில் சொன்னால் அது மெகா கூட்டணி அல்ல, மானங்கெட்ட கூட்டணி'' என்றவரிடம்,  ``இந்தத் தேர்தலில் உங்களைக் காணோம் என்று அமைச்சர்கள் கிண்டல் செய்கிறார்களே...'' என்று கேட்டதற்கு, ``இப்படித்தான் ஆர்.கே.நகர் தேர்தலிலும் சொன்னார்கள். அதன் முடிவு என்னாச்சு...அப்போது அவர்கள் பேசியதை போட்டுக் காட்டுங்கள்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close