கடல் கொந்தளிப்பில் சிக்கி மூழ்கிய படகு! - தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்பு | Rameswaram fishermen rescued after boat immersed in sea

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (03/03/2019)

கடைசி தொடர்பு:07:15 (04/03/2019)

கடல் கொந்தளிப்பில் சிக்கி மூழ்கிய படகு! - தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்பு

ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு கடல் கொந்தளிப்பில் சிக்கி மூழ்கியதால் தத்தளித்த 4 மீனவர்களை மற்ற மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

கடல் கொந்தளிப்பில் படகு மூழ்கி மீனவர்கள் தத்தளிப்பு

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 520-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று இரவு பாரம்பர்யமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை மீன்பிடிப்பை முடித்துக்கொண்டு கரை திரும்பி கொண்டிருந்தனர். அவ்வாறு கரை திரும்பிக் கொண்டிருந்தபோது கடலில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதனால் கரை திரும்பிக் கொண்டிருந்த  படகுகளில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு ஒன்று கடல் அலையில் சிக்கியது. இதில் படகின் பலகை உடைந்ததால் கடல் நீர் படகில் புகுந்தது. இதனால் படகு மூழ்கிய நிலையில், படகில் இருந்த மீனவர்கள் கருப்பையா, ராமர், போஸ், சுப்பிரமணியன் ஆகிய 4 மீனவர்களும் கடலில் உயிருக்குப் போராடிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இவர்களது அபயக் குரலை கேட்ட அப்பகுதியில் கரை திரும்பிக்கொண்டிருந்த படகு ஒன்றில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட மீனவர்களுக்கு முதலுதவி செய்து இன்று காலை ராமேஸ்வரத்துக்கு அழைத்து வந்தனர். 


[X] Close

[X] Close