சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சிதம்பரம் மருமகள் ஸ்ரீநிதி? | P Chidambaram's daughter in law srinithi to contest in Sivaganga: Sources

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (03/03/2019)

கடைசி தொடர்பு:10:48 (16/03/2019)

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சிதம்பரம் மருமகள் ஸ்ரீநிதி?

சிவகங்கை எம்.பி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக சிதம்பரம் மருமகள் ஸ்ரீநிதி போட்டியிடத் தயாராகி வருகிறார். இந்த தகவல் கட்சியினரிடையை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக் கூட்டம்

சிவகங்கை எம்.பி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி விட்டது என்கிறார்கள் அக்கட்சியினர். தொகுதி நிலவரப்படி சிதம்பரமோ அல்லது அவரது மகன் கார்த்தி ஆகியோர் போட்டியிடுவதை மக்கள் விரும்பவில்லை என்று பேசப்படுகிறது. இதனால், தன் மருமகள் டாக்டர்.ஸ்ரீநிதியை களத்தில் இறக்கிவிட சிதம்பரம் முடிவு செய்திருக்கிறார். அதன் தொடக்கமாக இன்று காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு தொகுதி வாரியாக வாட்ஸ்அப் குருப் உருவாக்கி, அதன் மூலம் கட்சித் தகவல்கள், செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது குறித்த பயிற்சி தொடர்பான கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்றைக்கு தகவல்களைக் கொண்டு செல்வதில் சோசியல் மீடியா பெரும்பங்கு வகிப்பதால் சிதம்பரம் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள். இதன் அட்மினாக ஸ்ரீநிதி இருப்பார் என்று கூட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதிகப்படியான தகவல்களை இந்த குரூப் மூலம் கொண்டு செல்லும் கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் முடிந்த பிறகு பரிசு வழங்கப்படும் என்று அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. `மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் இந்தத் தகவல்களை பெண்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராவதற்கு சிவகங்கை தொகுதியிலிருந்து முதல் எம்.பியாக டெல்லி  செல்ல வேண்டும்’ என்று கார்த்தி சிதம்பரம் பேசினார் என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close