போராளி முகிலன் உயிருக்கு காவல்துறையால் அச்சுறுத்தலா?! | Thiruparankundram SI sparks controversy over FB post about activist Mukilan

வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (03/03/2019)

கடைசி தொடர்பு:08:07 (04/03/2019)

போராளி முகிலன் உயிருக்கு காவல்துறையால் அச்சுறுத்தலா?!

 

காவலர்

சுற்றுச்சூழல் போராளி முகிலன் கடந்த பதினைந்து நாள்களாகக் காணாமல் போயிருக்கும் நிலையில், அண்மையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஒன்றிணைந்து சென்னை விருந்தினர் மாளிகை அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியது. இதற்கிடையே முகிலன் எங்கே என்று கேட்டு வெல்ஃபேர் கட்சியைச் சேர்ந்த கவுஸ் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்குக் கீழே கமெண்ட் செய்திருந்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் 'சமாதி' என்று பதிலிட்டிருந்தார். அந்தப் பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காவலர் பதிவு


முகிலன் காணாமல் போன அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வீடியோ ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆவணத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் சிலரைதான் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கிடையே முகிலன் காணாமல் போக்கடிக்கப்பட்ட நிலையில், காவல்துறையால் அவருக்கு ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் அவரது நண்பர்களும் உறவினர்களும் கூறி வந்தனர். இதற்கிடையே திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் நாகராஜனின் இந்தப் பதில் மேலும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முகிலன் காணாமல் போனது தொடர்பான ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close