`ரகசியமாக விஜயகாந்துடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்!’ - அமைச்சர் உதயகுமார் | Minister RB Udayakumar speaks about ADMK alliance with DMDK

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (03/03/2019)

கடைசி தொடர்பு:10:49 (16/03/2019)

`ரகசியமாக விஜயகாந்துடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்!’ - அமைச்சர் உதயகுமார்

ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் 1.71 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று லெட்சுமிபுரம் அருகே நடைபெற்றது. 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார்

இந்நிகழ்வில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றிபெறுவார். ஆனால், விருதுநகரில் போட்டியிட்டால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். டி.டி.வி. தினகரன் பக்கம் இருந்தவர்கள் எங்களுக்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் என் மீது கோபப்பட்டாலும் சரி. அதைச் சொல்லியே ஆக வேண்டும். இதுவரை ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி விஜயகாந்துடன் 5 முறை ரகசியமாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இது யாருக்காவது தெரியுமா?" என்றார்.

தே.மு.தி.க யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் சூழலில் அதிகரித்திருக்கும் நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டணி குறித்த ரகசிய பேச்சுவார்த்தை சம்பந்தமாக பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தேனி எம்.பி பார்த்திபன், மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close