`நான் நம்பிவிட்டேன்; இந்த உலகம் நம்ப வேண்டுமே?' - மோடிக்கு ப.சிதம்பரம் பதில் | As a proud citizen I am prepared to believe my government says P Chidambaram

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (04/03/2019)

கடைசி தொடர்பு:09:30 (04/03/2019)

`நான் நம்பிவிட்டேன்; இந்த உலகம் நம்ப வேண்டுமே?' - மோடிக்கு ப.சிதம்பரம் பதில்

விமானப் படை தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகளை குறிவைத்து பிரதமர் மோடி கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். 

மோடி

நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த `இந்தியா டுடே' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் மோடி. அதில், ``விமானி அபிநந்தன் மூன்று நாள்களில் விடுவிக்கப்பட்டதன் மூலம் இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கை தற்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். ரஃபேல் விமானம் இல்லாத நிலையை தற்போது நாடு உணர்கிறது. ரஃபேல் விமானம் தற்போது இருந்திருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும். தங்களின் சுயநலத்துக்காக ரஃபேல் விவகாரத்தில் சிலர் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். கட்சிகளின் அரசியலால் இப்போது நமக்குத்தான் பாதிப்பு. தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பின்னால் அணிவகுத்து நிற்கும் நிலையில், தீவிரவாதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இங்குள்ள கட்சிகளும், அமைப்புகளும் சந்தேகங்கள் எழுப்புவது வேதனை அளிக்கிறது. இது ஏன் எனத் தெரியவில்லை" எனக் கூறியிருந்தார்.

சிதம்பரம்

மோடியின் இந்தப் பேச்சுக்கு தற்போது முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், ``இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் ராகுல் காந்தி என்பதைப் பிரதமர் மோடி மறந்து விட்டார். விமானப் படையின் துணைத் தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார். இப்படியான நிலையில், தாக்குதலில் 350 பேர் வரை உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது. இந்தியக் குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான்  நம்புகிறேன். ஆனால் உலகம் நம்ப வேண்டுமே. அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு" என விமர்சித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close