``என் படம் நேற்றே அகற்றப்பட்டுவிட்டது!" - விமர்சனத்துக்கு உதயநிதி ஸ்டாலின் ரிப்ளை | Udhyanidhi Stalin's reply to the controversial tweet

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:45 (04/03/2019)

``என் படம் நேற்றே அகற்றப்பட்டுவிட்டது!" - விமர்சனத்துக்கு உதயநிதி ஸ்டாலின் ரிப்ளை

இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது எப்போதும் அரசியல் கட்சிகளுக்கிடையேயான கரும்புள்ளியாகவே இருக்கிறது. பல தேசிய மாநில கட்சிகளும் இந்த விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. கட்சிக்காகப் பல வருடங்களாக உழைத்து வருபவர்கள் இருக்கையில், சம்பந்தப்பட்டவரின் வாரிசு என்ற காரணத்துக்காக மட்டுமே பொறுப்பு வழங்கப்படுவது பல நிலைகளில் அரசியல் கட்சிகளுக்குள் பூகம்பமாக வெடிப்பதுண்டு. 

உதயநிதி

இந்த நிலையில், சமீபகாலமாக தி.மு.க சார்பில் ஒட்டப்படும் சுவரொட்டிகளில், அச்சிடப்படும் பேனர்களில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் இடம் பெறுகிறது. இதைப் புகைப்படமெடுத்து  பலரும் ட்விட்டரில் பதிவிட்டு உதயநிதி ஸ்டாலினை கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், கட்சி அலுவலகம் ஒன்றில் மறைந்த கருணாநிதியின் புகைப்படத்துக்கு அருகில் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் புகைப்படமும், அதே அளவில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது.

உதயநிதி

இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு ஒருவர், ``எந்தப் பொறுப்பில் இருக்கார்னு அவர் போட்டோவ மாட்டி வச்சுருக்கீங்க" என பதிவிட்டிருந்தார். அதற்கு பலரும் கமென்ட்  செய்திருந்தனர். இந்த ட்வீட்டை கோட் செய்த உதயநிதி ஸ்டாலின் , `` என்னுடைய படம் நேற்றே அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டது" என ட்வீட் செய்தார். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவரைப் பற்றிய இதுபோன்ற ட்வீட்களை ஊடனடியாக கவனித்துப் பதிலளிக்கிறார். 


[X] Close

[X] Close