`உதயசூரியன் சின்னத்தில் போட்டியா?’ - தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் விளக்கம் | thirumavalavan talks about dmk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:00 (16/03/2019)

`உதயசூரியன் சின்னத்தில் போட்டியா?’ - தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் விளக்கம்

தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திருமாவளவன்

தி.மு.க கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. அதேபோல், கொங்கு ஈஸ்வரனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட உள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், தி.மு.க தோழமை கட்சிகளான ம.தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தி.மு.க தரப்பில் கடந்தவாரமே முடித்துவிட்டது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இரண்டாம் கட்ட  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

தி.மு.க

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், ``நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் நானும், ஸ்டாலினும் கையெழுத்திட்டுள்ளோம். இரண்டு தொகுதிகள் எந்தெந்த இடங்கள் என்பதை வி.சி.க நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும்" என்றார். 

திருமாவளவன்

அப்போது, தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னத்தில் போட்டியிடப் போகிறீர்களா அல்லது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த திருமாவளவன், ``ஏற்கெனவே நாங்கள் பல தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். தற்போதுள்ள சூழ்நிலையில், கூட்டணி நலன் கருதி எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது உகந்ததாக இருக்கும் என்பதைக் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close