`இருட்டில் தனியாகப் போக பயந்தவர்கள்தான் கூட்டணி வைத்துள்ளனர்!' -அ.தி.மு.க வை விளாசிய தினகரன் | TTV Dinakaran slams ADMK for PMK alliance

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:07 (16/03/2019)

`இருட்டில் தனியாகப் போக பயந்தவர்கள்தான் கூட்டணி வைத்துள்ளனர்!' -அ.தி.மு.க வை விளாசிய தினகரன்

ஆர்.கே.நகர்த் தொகுதி தேர்தலில் தோல்வியடைந்தது போல 39 மக்களவை தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி தோல்வியடையும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

தினகரன்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பிரமுகரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அ.ம.மு.க துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன் பங்கேற்றார். பின்னர் சாத்தூர் வந்த அவர் செய்தியாளர்களிடம், ``உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அ.தி.மு.கவின் ஒரு பிரிவுதான் அ.ம.மு.க. இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிப் பெயருக்காகப் போராட எங்களுக்கு உரிமை உண்டு.

இரட்டை இலை வழக்கில் எங்கள் உரிமையை நிலைநாட்டவே அ.ம.மு.க கட்சியை நாங்கள் இன்னும் பதிவு செய்யாமல் உள்ளோம். அமைச்சராக இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என ராஜேந்திரபாலாஜி நினைப்பது தவறு. இந்த ஆட்சி முடிந்த பின் அ.ம.மு.கவின் வளர்ச்சியை திண்ணையில் உட்கார்ந்து அவர்கள் வேடிக்கைதான் பார்க்க வேண்டும். இருட்டில் தனியாகப் போக பயந்தவர்கள்தான் கூட்டணி வைத்துள்ளனர்.

தினகரன்

ஆர்.கே.நகர்த் தேர்தல் போல தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி தோல்வியடையும். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெலுங்கு பட ரவுடி போலவும், கோயில் பூசாரி போலவும் உள்ளார்" எனத் தெரிவித்தார்.

 

 


[X] Close

[X] Close