பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!   | Keerthy Suresh is gonna enter in Bollywood Industry

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (04/03/2019)

கடைசி தொடர்பு:16:40 (04/03/2019)

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!  

விஜய் நடித்து வெளிவந்த 'சர்கார்' படத்துக்குப் பிறகு, 'மரக்கார்- அரபிலக்கடலின்டே சிம்ஹம்' எனும் மலையாளப் படம் ஒன்றில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். ப்ரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் இப்படத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்புக்குப் பிறகு, பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

கீர்த்தி சுரேஷ்

சென்ற ஆண்டு வெளியாகி, பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டடித்த 'பாதாய் ஹோ' படத்தின் இயக்குநர் அமித் ஷர்மா இப்படத்தை இயக்குகிறார். போனி கபூர் படத்தைத் தயாரிக்கிறார். இதன் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் சினிமா வட்டாரத்தில் உலவுகிறது. 


[X] Close

[X] Close