எந்தத் தொகுதியில் திருமாவளவன் போட்டி?- வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் பதில் | Thirumavalavan to contest in Chidambaram constituency, confirms VCK

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:11 (16/03/2019)

எந்தத் தொகுதியில் திருமாவளவன் போட்டி?- வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் பதில்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு, கட்சிகள் தங்களுடைய கூட்டணிகளை உறுதிசெய்கிற பரபரப்பில் இருக்கின்றன. இன்று, தி.மு.க தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்கக்கூடிய இடங்கள் குறித்தான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க, ஆகிய கட்சிகளுக்கு அளிக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை  உறுதி செய்யப்பட்டது. இம்மூன்று கட்சிகளுக்கும் தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்குரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன.  

இதில், யார் யார் எந்தெந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்கிற தகவல் இனிதான் தெரியவரும் என்கிற சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நிற்கக்கூடிய தொகுதிகுறித்த தகவல் கிடைத்தது. அதை உறுதிசெய்து கொள்வதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கௌதம சன்னாவிடம் பேசினோம். "எங்கள் கட்சிக்கான தொகுதிப் பங்கீடுகுறித்த பேச்சுவார்த்தை இன்னைக்கு நிறைவடைந்தது. இரண்டு தொகுதிகள் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது" என்றார். 


[X] Close

[X] Close