`திக்கு தெரியாத காட்டில் திசை மாறிய பறவை தி.மு.க!’ - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் | TN Minister Jayakumar Slams DMK Party

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:12 (16/03/2019)

`திக்கு தெரியாத காட்டில் திசை மாறிய பறவை தி.மு.க!’ - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஜெயக்குமார்

சென்னை - கொல்லம் இடையிலான தினசரி ரயில் சேவை தொடக்க விழா, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ``அ.தி.மு.க மெகா கூட்டணியை அமைத்துள்ளது. மற்ற கட்சிகளை விட வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறோம். திக்கு தெரியாத காட்டில் திசை மாறிய பறவைபோல தி.மு.க கூட்டணி உள்ளது. கூட்டணி அமைப்பதினால் பலவீனம், கூட்டணி அமைக்காததால் பலம் என்று எல்லாம் கிடையாது. எங்களுக்குரிய பலம் எங்களிடம் உள்ளது. அவர்களுக்கான பலம் அவர்களிடம் உள்ளது. மற்ற கட்சிகள்  கூட்டணியில் இணையும் போது இது மேலும் அதிகரிக்கும்.

 மக்களுக்காக அரசு அறிவிக்கும் திட்டங்கள் அவர்களிடம் சென்றடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பது தி.மு.க தான். இதையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அதற்குரிய பலனை அவர்கள் அனுபவிப்பார்கள். பொங்கல் பரிசு திட்டத்தை எதிர்த்தார்கள். இப்போதுவறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்காகவே 2,000 ரூபாய் நிதியுதவி திட்டம் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக அதை அரசியல் காழ்ப்புணச்சிக்காக எதிர்த்து வருகிறது” என்றார்.
 


[X] Close

[X] Close