இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டம்... பள்ளி மாணவர்களுக்குப் புதிய வாய்ப்பு! | Isro launched a new scheme Young Scientist Programme

வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (04/03/2019)

கடைசி தொடர்பு:20:05 (04/03/2019)

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டம்... பள்ளி மாணவர்களுக்குப் புதிய வாய்ப்பு!

விண்வெளித் தொழில்நுட்பங்கள், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளித்துறையின் பயன்பாடுகள் குறித்து இளம்தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஆண்டு முதல் `இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டம்' ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது இஸ்ரோ. இதன்படி இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் மாணவர்களுக்குக் கோடைக்கால விடுமுறையின்போது இஸ்ரோவில் இரண்டு வாரங்களுக்கு நேரடிப் பயிற்சியளிக்கப்படும். 

இஸ்ரோ

இந்தத் திட்டத்திற்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். CBSE, ICSE மற்றும் அந்தந்த மாநிலங்களின் மாநிலப் பாடத் திட்டங்களில் பயிலும் மாணவர்கள் இதற்காகத் தேர்வுசெய்யப்படுவார்கள். இதற்காகத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தற்போது 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும். 

இஸ்ரோ

இவர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close