விருதுநகர் வணிக வரித்துறை அலுவலகத்தில் சோதனை! - கணக்கில் வராத ரூ.32,900 பறிமுதல் | vigilance raid in virudhunagar income tax office

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (04/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (04/03/2019)

விருதுநகர் வணிக வரித்துறை அலுவலகத்தில் சோதனை! - கணக்கில் வராத ரூ.32,900 பறிமுதல்

விருதுநகர் வணிக வரித்துறை  அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.32,900 கைப்பற்றப்பட்டது.

வணிக வரித்துறை அலுவலகத்தில் சோதனை

விருதுநகரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில், வணிக நிறுவனங்களிடமிருந்து வரி வசூல் செய்யப்படும். இதில், ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படுவதால், வணிக நிறுவன உரிமையாளர்களிடம் மீண்டும் அந்தத் தொகை வழங்கப்படும். இந்நிலையில், வரிவிலக்கு செய்யப்படும் பணத்தை வணிக  நிறுவன உரிமையாளர்களிடம் வழங்குவதற்காக வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது.

வணிக வரித்துறை அலுவலகத்தில் சோதனை

அந்தப் புகாரின் அடிப்படையில், டிஎஸ்பி ரகுபதி தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள் மற்றும் 5 காவலர்கள் என 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், வணிக வரித்துறை அலுவலகத்தில் இன்று மாலை சுமார் 4 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது, வணிக வரித்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) (தூத்துக்குடி, விருதுநகர்) பூங்கோதையிடம் ரூ.29,900 மற்றும் உதவியாளர் ரவியிடம் ரூ.3000 என கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.32,900 இருந்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close