தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை செய்த புதுவை முதல்வர் நாராயணசாமி! | Puducherry CM Narayasamy holds special prayer in Thayamangalam temple

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (04/03/2019)

கடைசி தொடர்பு:23:30 (04/03/2019)

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை செய்த புதுவை முதல்வர் நாராயணசாமி!

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறவும், கவர்னரை எதிர்த்து வெற்றிபெறவும் வேண்டு புதுவை முதல்வர் நாராயணசாமி தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

புதுவை முதல்வர் நாராயணசாமி

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் தென்மாவட்ட மக்களுக்கு வேண்டும் வரம் அளிக்கும் சக்தி கொண்ட அம்மன் என்பது ஐதீகம்.  நாராயணசாமிக்கும் புதுச்சேரி கவர்னர் கிரன்பேடிக்கு இடையே நடக்கும் உச்சகட்ட மோதலுக்கும், நாடாளுமன்றத் தேர்தல் தனக்கு பலமான வெற்றியும், எதிரிகளை வெல்லவும்  தெய்விக சக்தி வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சக்திவாய்ந்த கோயிலுக்குச் சென்றுவருகிறார் நாராயணசாமி.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் எதிரிகளையும் ,அரசியலில் வெற்றி வாய்ப்பையும் பெற வேண்டுபவர்கள் இங்கே வந்து சென்றால் வெற்றிவாய்ப்பு உறுதியாகக் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவேதான் புதுச்சேரி முதல்வர் இங்கே வந்து சென்றிருக்கிறார் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.  திருக்கோயிலுக்கு வந்த புதுச்சேரி  முதல்வரை கோயில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் வரவேற்றார். புதுச்சேரி முதல்வர் மாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரை அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அவருடன் இளையான்குடி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ., மதியரசன், முன்னாள் மத்திய அரசு வக்கீல் வீரணசாமி, மதுரை மாவட்டக் காங்கிரஸ் தலைவர் கார்த்தி மற்றும் தி.முக., காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் வந்தனர். இங்கிருந்து புறப்பட்டு அவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close