``பாகிஸ்தானில் நடத்தப்பட்டது திட்டமிடப்பட்ட தாக்குதல்தான்!” கோவையில் ஏர் சீஃப் மார்ஷல் தகவல் | Air chief marshal press meet in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (05/03/2019)

கடைசி தொடர்பு:08:30 (05/03/2019)

``பாகிஸ்தானில் நடத்தப்பட்டது திட்டமிடப்பட்ட தாக்குதல்தான்!” கோவையில் ஏர் சீஃப் மார்ஷல் தகவல்

அபிநந்தன் ஏர் சீஃப் மார்ஷல்

``அபிநந்தன் உடல் தகுதியை அடிப்படையாகக் கொண்டு அவர் மீண்டும் போர் விமானத்தை இயங்குவது குறித்து முடிவு செய்யப்படும்" என்று இந்திய விமானப் படை ஏர் சீஃப் மார்ஷல் பிரேந்திர சிங் தனுவா கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கோவை சூலூர் விமான படைத்தளத்தில் இந்திய விமானப் படை ஏர் சீப் மார்ஷல் பிரேந்திர சிங் தனுவா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார், ``எல்லையில் கண்காணித்தல் மற்றும் பாதுகாப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பாகிஸ்தானில் நடத்தப்பட்டது திட்டமிடப்பட்ட தாக்குதல்தான். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை திட்டமிட்டுத் தாக்கினோம். அங்கு ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நாங்கள் சொல்ல முடியாது. அதுகுறித்து அரசுதான் தெரிவிக்க முடியும்.

விமானி அபிநந்தன் உடல் தகுதியை அடிப்படையாகக் கொண்டு அவர் மீண்டும் விமானத்தில் இயங்குவது குறித்து முடிவு செய்யப்படும். அபிநந்தன் விவகாரத்தில் அரசியல் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாது. திடீர் தாக்குதல் என்பதால், மிக் 21 பைசன் விமானத்தை அபிநந்தன் பயன்படுத்தினார். எல்லையில் தற்போது நடைபெறும் தாக்குதல் குறித்தும் இப்போது பேசமுடியாது. 36 ரஃபேல் விமானங்கள் செப்டம்பர் மாதம் கிடைத்துவிடும். 83 இலகுரக விமானங்களும் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையில் பெண்கள் 13 சதவிகிதம் பணிபுரிகின்றனர்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close