முதுமலை அருகே வனப்பகுதியில் இறந்த நிலையில் ஆண் யானை -வனத்துறையினர் ஆய்வு | Elephant death near mudumalai

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (05/03/2019)

கடைசி தொடர்பு:10:20 (05/03/2019)

முதுமலை அருகே வனப்பகுதியில் இறந்த நிலையில் ஆண் யானை -வனத்துறையினர் ஆய்வு

முதுமலையை ஒட்டிய சிங்காரா வனப்பகுதியில் இறந்த நிலையில் ஆண் யானை சடலம் கண்டெடுக்கப்பட்டது.

யானை

 

வன விலங்குகள் நிறைந்த முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. கடந்த மாதமே வனவிலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்தன. வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனப்பகுதியில் உள்ள செயற்கை குட்டைகளில் வாகனங்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. மேலும் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீயால் பல ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி எரிந்து நாசமானது. 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட தீ நிலமையை இன்னும் மோசமாக்கியது.

உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட விலங்குகள் தொடர்ந்து இடம் பெயர்கின்றன. இந்த நிலையில், முதுமலையை ஒட்டியுள்ள சிங்காரா வனச் சரகத்துக்கு உட்பட்ட மாவனல்லா அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர். மசினகுடி கால்நடை மருத்துவர் கோச்சலன் பிரேதப் பரிசோதனை செய்தார். ஆய்வுக்குப் பின்னரே யானையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


[X] Close

[X] Close