‘ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதிக்கு மனு வாங்க மறுப்பு!’ - ஏழைத் தொழிலாளர்களைக் கலங்கடித்த அதிகாரிகள் | 2,000 rupees Special funds petition was not received by officers

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (05/03/2019)

கடைசி தொடர்பு:11:20 (05/03/2019)

‘ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதிக்கு மனு வாங்க மறுப்பு!’ - ஏழைத் தொழிலாளர்களைக் கலங்கடித்த அதிகாரிகள்

வேலூரில், ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி பெறுவதற்கான விண்ணப்பங்களை அதிகாரிகள் வாங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த ஏழைத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறப்பு நிதி பெறுவதற்காக மனு கொடுக்க வந்த ஏழைத் தொழிலாளர்கள்.

தமிழகத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். இந்த சிறப்பு நிதியைப் பெறுவதற்காக, வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளிகள் உள்பட ஏழைத் தொழிலாளர்கள் கூட்டமாக கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களுக்குச் சென்று மனு கொடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில், வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த ஏழைத்தொழிலாளர்கள் ஏராளமானோர், சிறப்பு நிதி பெறுவதற்காக, மாநகராட்சி   3-வது மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அதிகாரிகள், ‘மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம்’ முடிந்துவிட்டதாகக் கூறி, மனுக்களை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அண்ணாசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். வேலூர் தெற்கு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். கவலைதோய்ந்த முகத்துடன் ஏழைத் தொழிலாளர்களும் கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது.


[X] Close

[X] Close