உச்சிப்புளி அருகே சுற்றுலா வேன் - மீன் ஏற்றி வந்த வாகனம் மோதல் -இரண்டு பேர் பலி! | Two persons were killed when a vehicle carrying a fish van on a tourist van met with an accident near Uchipuli

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (05/03/2019)

கடைசி தொடர்பு:11:35 (05/03/2019)

உச்சிப்புளி அருகே சுற்றுலா வேன் - மீன் ஏற்றி வந்த வாகனம் மோதல் -இரண்டு பேர் பலி!

உச்சிப்புளி அருகே நடந்த சுற்றுலா வேன் - மீன் ஏற்றிவந்த வந்த வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர்.

 

உச்சிப்புளி அருகே நடந்த சுற்றுலா வேன் - மீன் வண்டி விபத்து

பல்லடம் பகுதியைச் சேர்ந்த மிதுன்குமார் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் நேற்று ராமேஸ்வரம் வந்துவிட்டு இன்று அதிகாலையில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம்  உச்சிப்புளி அருகே பாம்பனில் இருந்து மீன் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று சுற்றுலா வேனை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிர்புறத்திலிருந்து கார் ஒன்று வந்துள்ளது. இதைக் கவனிக்காத மீன் ஏற்றிச் சென்ற வாகன ஓட்டுநர் அதிர்ச்சியில் முன்னே சென்ற வேனின் மீது மோதியுள்ளார். 

இதனிடையே எதிரே வந்த காரும் இந்த விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மீன் ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் பாம்பனைச் சேர்ந்த உமர்அலி மற்றும் சுற்றுலா வாகனத்தில் சென்ற பல்லடம் அருகே உள்ள கிடாய்துறை ராமர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மிதுன்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் முருகசாமி, சின்னசாமி, பழனியம்மாள், லதா, கார்த்திக், சிவகாமி, விக்னேஸ்வரன், செல்வகுமார் உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர். இவர்களில் படுகாயம் அடைந்த 4 பேர் முதலுதவி சிகிச்சைக்குப் பின் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


[X] Close

[X] Close