``சின்னங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது!”- டி.டி.வி. தினகரன் கருத்து | TTV dinakaran interview in kanniyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (05/03/2019)

கடைசி தொடர்பு:11:20 (16/03/2019)

``சின்னங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது!”- டி.டி.வி. தினகரன் கருத்து

``மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதனால், சின்னங்களுக்கு பெரிய முக்கித்துவம் கிடையாது” என அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

தினகரன்

அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று கன்னியாகுமரி வந்தார். அவருக்கு அஞ்சுகிராமம் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில்  சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கொட்டாரத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

தினகரன்

மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க தேர்தல் காரியாலயத்தைத் திறந்துவைக்க உள்ளார். முன்னதாக, கன்னியாகுமரியில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இரட்டைஇலை சின்னம் கிடைக்காதது எங்களுக்குப் பின்னடைவு அல்ல. தேர்தலில் சின்னம் என்பது ஒரு பொருட்டே அல்ல. மக்களும், அம்மாவின் தொண்டர்களும் எங்களுடன் இருக்கிறார்கள்.

தினகரன்

ஆகையால், 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம். ஆர்.கே. நகரில் வெற்றிபெற்ற குக்கர் சின்னம் தமிழகம் முழுவதும் பிரதிபலிக்கும்.  மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதனால், சின்னங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். குக்கர் சின்னம் நிச்சயமாக எங்களுக்குக் கிடைக்கும்" என்றார்.


[X] Close

[X] Close