``ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்" - சென்னையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு | Start up Basics class in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (05/03/2019)

கடைசி தொடர்பு:14:50 (05/03/2019)

``ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்" - சென்னையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு

தகவல் தொழில்நுட்ப உலகம், ஆட்டோமேஷன், ரோபோட்டிக் எனப் பல்வேறு பிரிவுகளில் நாளுக்கு நாள் விரிவடைந்துவருகிறது. இதன்மூலம், புதிதாகப் பல கண்டுபிடிப்புகளும், தொழில் வாய்ப்புகளும் பெருகிவருகின்றன. இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள், ஸ்டார்ட்அப்  நிறுவனங்களைத் தொடங்கி, தொழில் முனைவோர்களாகக் களமிறங்கும்போதுதான் பல சாதனைகளைச் செய்ய முடியும். 

பயிற்சி வகுப்பு

உங்களுக்கும் ஃப்ளிப்கார்ட், ஓலா, ஸ்விக்கி போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிபெற வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறதா? ஆனால், ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எப்படித் தொடங்குவது, அதற்கான முதலீட்டுக்கு என்ன செய்வது என்ற குழப்பமா? ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்குவது முதல், தொழில் முதலீடு பெறுவதற்கான வழிமுறைகள் வரை எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள அரிதான ஒரு களத்தைத் தேடிக்கொண்டிருக்கும் உங்களுக்காக, நாணயம் விகடன் மற்றும் YNOS Venture Engine(An IIT Madras Incubated Start-up) இணைந்து, ‘ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்' என்ற ஒருநாள் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

முதல் பயிற்சி வகுப்பு, சென்னையில் 2019 மார்ச் 31 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. பிசினஸில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் அனைவரும் இந்தப் பயிற்சி வகுப்பில் அவசியம் கலந்துகொண்டு பயன்பெறலாம். பயிற்சிக் கட்டணம் : ரூ.6,000. Early bird offer : ரூ.4,000 (மார்ச் 15 வரை)

இப்பயிற்சி வகுப்பில், நம் நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சூழலை முழுமையாகப் புரிந்துகொள்வது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு குறித்த நுணுக்கமான விஷயங்களைப் புரிந்துகொள்வது,  YNOS டெக்னாலஜி இணையதளம் குறித்த அறிமுகம், அதன்மூலம் ஸ்டார்ட்அப்-களுக்குக் கிடைக்கும் நன்மைகள், சலுகைக் கட்டணத்தில் YNOS டெக்னாலஜி இணையதளத்தைப் பயன்படுத்திக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பயிற்சி வகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

பயிற்சியாளர்: Dr. அ.தில்லை ராஜன், 
Professor, DoMS, IIT, Chennai, Associate, Harvard University, USA, Founder, YNOS Venture Engine

மேலும் விவரங்களுக்கு, 9940415222 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.


[X] Close

[X] Close