''விக்கிபீடியா சொல்றது தப்பு; ராதிகா சொன்னதுதான் சரி!'' - நடிகை ஶ்ரீப்ரியா#HBDActSripriya | Actress Sripriya talks about her birthday celebrations

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (05/03/2019)

கடைசி தொடர்பு:14:35 (05/03/2019)

''விக்கிபீடியா சொல்றது தப்பு; ராதிகா சொன்னதுதான் சரி!'' - நடிகை ஶ்ரீப்ரியா#HBDActSripriya

'ஹேப்பி ஹேப்பி பர்த்டே ஆலு' என்று நடிகையும் அரசியல்வாதியுமான ஶ்ரீப்ரியாவை ட்விட்டரில் வாழ்த்தியிருந்தார், நடிகை ராதிகா. உடனே ஶ்ரீப்ரியாவுக்கு போன் செய்து, நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துகளையும் சொன்னோம். மகிழ்ச்சியுடன் நன்றி சொன்னவர், தன் சிறு வயது பிறந்தநாள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். 

ஶ்ரீப்ரியா தன் தோழமைகளுடன்

PC: twitter.com

''எனக்கு பிறந்தநாள் கொண்டாடுறதுல பெரிய ஈடுபாடு கிடையாது. ஏன்னா, நான் பிறந்தது சாதாரண நடுத்தர குடும்பத்துல. பிறந்தநாள் அன்னிக்கு, என்கிட்டே இருக்கிறதுலேயே நல்ல டிரெஸ்ஸா உடுத்திப்பேன். காலையில் கோயிலுக்குப் போயிட்டு வந்தா, வீட்டில் காய்கறி சமையல்தான் இருக்கும். என் சின்ன வயசு பிறந்தநாளெல்லாம் இப்படித்தான் இருந்துச்சு. நாம ஒரு விஷயத்தை சின்ன வயசுல கோலாகலமா கொண்டாடியிருந்தா, அதையே பின்னாளிலேயும் ஃபாலோ பண்ணுவோம். எனக்கு பிறந்தநாளை பெருசா கொண்டாடித்தான் பழக்கமே இல்லையே'' என்றவர், தன் பிள்ளைகள் நேற்று இரவு 12 மணிக்கு போன் செய்து, பிறந்தநாள் வாழ்த்து சொன்னதை அம்மாவுக்கே உரிய உற்சாகத்துடன் சொன்னார். 

விக்கிபீடியா, உங்க பிறந்தநாளை ஜூலை 28 என்று சொல்கிறதே என்றோம். ''அச்சச்சோ... வீக்கிபீடியா என்னைப் பத்தி சொல்றதெல்லாம் தப்புதான்; ராதிகா சொல்றதுதான் கரெக்ட்'' என்றார் அவருக்கே உரித்தான சிரிப்புடன். 


[X] Close

[X] Close