முடிவுக்குவந்தது இழுபறி! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு | cpm seat sharing in dmk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (05/03/2019)

கடைசி தொடர்பு:15:12 (05/03/2019)

முடிவுக்குவந்தது இழுபறி! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

அண்ணா அறிவாலயம்

 நீண்ட இழுபறிக்குப் பின் தி.மு.க  கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை  தி.மு.க  ஒதுக்கியுள்ளது.     

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிவிட்டது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இந்திய  கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அந்தக் கட்சிகளுக்கான தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த இரண்டு நாள்களாக  நடைபெற்றுவந்தது.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10  தொகுதிகளும்,  ம.தி.மு.க-வுக்கு  2 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு  தொகுதியும், இந்திய ஜனநாயக் கட்சிக்கு  ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகளுக்குத் தொகுதி உடன்பாடு முடிவடைந்துவிட்ட நிலையில்,  மார்க்சிஸ்ட் கட்சிக்கு  தொகுதிகள் முடிவாகாமல்இரண்டு நாள்களாக இழுபறி நீடித்துவந்தது.

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  ஆறு தொகுதிகளைக் கேட்டது. அதில் மதுரை, கோவை, கன்னியாகுமரி, வடசென்னை, நாகை, திருப்பூர்  ஆகிய ஆறு தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்திருந்தது. அதனால், தி.மு.க  இரண்டு தொகுதிகள்  தருவதாகக் கூறியது. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி மூன்று தொகுதிகளாவது ஒதுக்குமாறு பேசியது. ஆனால்  மற்ற கட்சிகளின் நிலையை எடுத்துக் கூறிய  தி.மு.க,  இரண்டு தொகுதிகளை  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு  ஒதுக்கியுள்ளது.   

 

 


[X] Close

[X] Close