தாய்- மகள் தகராறில் பறிபோன பச்சிளங்குழந்தையின் உயிர்! | Child died in family dispute near sirkazhi

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (05/03/2019)

கடைசி தொடர்பு:16:35 (05/03/2019)

தாய்- மகள் தகராறில் பறிபோன பச்சிளங்குழந்தையின் உயிர்!

சீர்காழி அருகே தாய்க்கும் மகளுக்கும் இடையே நடந்த குடும்பத் தகராறில் 3 மாதப் பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்த குழந்தை

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ளது தொடுவாய் மீனவ கிராமம். இங்கு வசிக்கும் ஆறுமுகம் - அம்புஜம் தம்பதியின் ஒரே மகள் வினோதா. வினோதாவுக்கும் வாணகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரனுக்கும் திருமணமாகி, அந்தத் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. கணவனைப் பிரிந்து பெற்றோருடனே வசித்து வந்த வினோதாவின் பழக்கத்தை ஊர் பஞ்சாயத்தார்கள் பல முறை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பமான வினோதாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு குழந்தை அப்போதே இறந்துவிட, மற்றொரு பெண் குழந்தையை சத்யாஸ்ரீ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு தாய் அம்புஜகத்திற்கும் வினோதாவுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. அப்போது வினோதா கையில் வைத்திருந்த குழந்தையை வீசி எறிய, அக்குழந்தை தரையில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது. தகவலறிந்த சீர்காழி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு கொலை வழக்கு பதிவு செய்து வினோதாவைக் கைது செய்திருக்கிறார். ஈவு இரக்கமின்றி பெற்ற குழந்தையின் சாவுக்கு தாயே காரணமாயிருந்தது கண்டு அப்பகுதி சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

படங்கள்: பா.பிரசன்னா


[X] Close

[X] Close