`அபிநந்தன் விவகாரத்தில் நான் முடிவு எடுக்க முடியாது!' - நிர்மலா சீதாராமன் | Nirmala sitharaman Speaks about balcot attack

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (05/03/2019)

கடைசி தொடர்பு:15:50 (05/03/2019)

`அபிநந்தன் விவகாரத்தில் நான் முடிவு எடுக்க முடியாது!' - நிர்மலா சீதாராமன்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா என்பது குறித்து மருத்துவர்களும், விமானப்படை வீரர்களும்தான் முடிவெடுப்பார்கள் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புதான் தாக்குதல் நடத்தியது எனத் தெரியவந்ததால் நாம் பதில் தாக்குதலை நடத்தினோம். பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பலமுறை வலியுறுத்தியும் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனாலேயே நான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தாக்குதல் நடத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த கிராம மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தாக்குதலை நடத்தியுள்ளோம்.

அபிநந்தனைச் சந்தித்த நிர்மலா சீதாராமன்

இந்தத் தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என நான் தெரிவிக்க முடியாது. இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை செயலாளரின் அறிக்கையே அரசின் நிலைப்பாடு. விமானப்படை வீரர் அபிநந்தன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விமானம் இயக்குவாரா என்பது குறித்து மருத்துவர்களும், விமானப்படை அதிகாரிகளும்தான் முடிவெடுப்பார்கள். மும்பை தாக்குதலிலிருந்து கூறி வருகிறோம் தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றிபெறும். மோடி பிரதமராக மீண்டும் வருவார். நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்களா என நான் கருத்துக்கூற முடியாது. என்றார்.


[X] Close

[X] Close