கர்ப்பிணிக்கு விநோதக் கட்டி!- அறுவை சிகிச்சையில் அகற்றி மதுரை அரசு டாக்டர்கள் சாதனை | Madurai Rajaji government hospital doctors performed rare operation

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (05/03/2019)

கடைசி தொடர்பு:16:20 (05/03/2019)

கர்ப்பிணிக்கு விநோதக் கட்டி!- அறுவை சிகிச்சையில் அகற்றி மதுரை அரசு டாக்டர்கள் சாதனை

கர்ப்பிணிக்கு அட்ரீனல் சுரப்பியில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதித்துள்ளனர் மதுரை அரசு ராசாசி மருத்துவமனை டாக்டர்கள்.

மதுரை அரசு ராசாசி மருத்துவமனை முதல்வர் வனிதாவுடன் டாக்டர்கள்

மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை அடுத்த அரியாண்டிபுரத்தைச் சேர்ந்த புனிதராணி (24) என்ற கர்ப்பிணிக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டு, மயக்கம் நிலையில் அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவக் குழு அவரை சோதனை செய்ததில் ரத்தத்தின் அளவு 250- 130 என்ற குறியீட்டு அளவில் இருந்துள்ளது. மேலும் பல்வேறு கட்ட சோதனையில் அட்ரீனல் சுரப்பியில் கட்டி இருப்பது தெரியவந்தது. இந்தக் கட்டியானது மிகவும் அறிதாகக் காணப்படக்கூடிய ஒன்று. கிட்டத்தட்ட 50 லட்சம் கர்ப்பிணிப் பெண்களில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் விநோத நோயாக இருந்துவருகிறது.

இந்நிலையில் இந்தக் கட்டியினை நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் டாக்டர்கள். மதுரை அரசு ராசாசி மருத்துவமனை அறுவை சிகிச்சை துறைத் தலைவர் தாமோதரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் இந்த அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய 7 லட்சம் வரை வெளி மருத்துமனையில் செலவாகும். ஆனால், தற்போது முதலமைச்சர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இந்தக் கர்ப்பிணியின் குழந்தையும் கர்ப்பிணியும் நலமாக இருப்பதாக ராசாசி மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்தார். கர்ப்பிணிக்கு ஏற்பட்ட விநோத நோயினைக் கண்டறிந்து சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.


[X] Close

[X] Close