`சென்னைக்கு வரும் மோடிக்கு சில கேள்விகள்!’ - கௌதமன் கோரிக்கை | Gauthaman questioned Modi over his Chennai Visit

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (05/03/2019)

கடைசி தொடர்பு:17:43 (05/03/2019)

`சென்னைக்கு வரும் மோடிக்கு சில கேள்விகள்!’ - கௌதமன் கோரிக்கை

`சென்னைக்கு வரும் மோடிக்கு சில கேள்விகள்!’ - கௌதமன் கோரிக்கை

அ.தி.மு.க மற்றும் கூட்டணிக்கட்சி சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் நாடாளுமன்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிறார். தமிழகத்துக்கு மோடி எப்போது வந்தாலும் அவருக்கு கறுப்புக்கொடி காட்டி வருகின்றனர் எதிர்க்கட்சியினர். இந்தநிலையில், மோடியின் தமிழகம் வருகை குறித்து, `தமிழ்ப் பேரரசு கட்சி’ என்கிற பெயரில் கட்சித் தொடங்கிய இயக்குநர் கௌதமனிடம் பேசினோம்.’’

``மோடியின் வருகையைக் கறுப்புக்கொடி காட்டியோ, கோ பேக் மோடி என கோஷமிட்டோ தடுக்கப்போவதில்லை. அவருக்குச் சில கோரிக்கைகள் வைத்திருக்கிறோம். நீட் விலக்கம், எழுவர் விடுதலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுதல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுதல், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாப்பான வேளாண் மண்டலங்களாக அறிவித்தல், கஜா நிவாரணம் அளித்தால் ஆகியவற்றை மோடி நாளை பேசப்போகும் மேடையில் அறிவிக்க வேண்டும். இதுதான் எங்கள் அடிப்படை கோரிக்கை.

வ கௌதமன்

அவர் அப்படி செய்யாத பட்சத்தில் வருகின்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்து, அவர்களைத் தோற்கடிக்கப்போவது உறுதி. ஆகவே, மோடி, ஆட்சியிலிருந்து போகும்போதாவது செய்த தவற்றைத் திருத்தி சில நல்லதைச் செய்துவிட்டுப் போகட்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார். 
 


[X] Close

[X] Close