`தேர்தலுக்குப் பின் பார்ப்போம்!’ - தினகரனுக்கு சவால்விடும் ராஜேந்திர பாலாஜி | Minister Rajendirabalaji slams TTV Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (05/03/2019)

கடைசி தொடர்பு:18:30 (05/03/2019)

`தேர்தலுக்குப் பின் பார்ப்போம்!’ - தினகரனுக்கு சவால்விடும் ராஜேந்திர பாலாஜி

``முதல்வர் எடப்பாடியைத் தினகரன் அவதூறாகப் பேசுவதால் நாங்களும் தினகரனை பற்றிப் பேசுகிறோம்’’ எனப் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தாமிரபரணி ஆற்றிலிருந்து விருதுநகர் மாவட்டத்துக்குத் தண்ணீர் கொண்டுவரப்படும் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. அவற்றைத்தொடர்ந்து சிவகாசி அருகே உள்ள நாராயணபுரத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. அந்த சோதனையோட்டத்தை, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று பார்வையிட்டார்.

ராஜேந்திர பாலாஜி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தினகரனுடன் இருப்பவர்கள்தான் குண்டர்கள்போல செயல்படுகின்றனர். அதைக் கண்டிக்கக் கூடாதா. உண்மையைச் சொன்னால் கசக்கும். நாங்கள் திண்ணையில் உட்காருவோமா, தினகரன் பண்ணையில் உட்காருவாரா என்பதை தேர்தலுக்குப் பின் பார்ப்போம். தற்போது அவர் தனிமரமாக இருக்கிறார். அ.தி.மு.க-வை தினகரன் அழிக்க நினைத்தால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். அ.தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாட்டிலும் தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டிலும் அவர் உள்ளார்.

கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை பார்வையிடும் ராஜேந்திர பாலாஜி

முதல்வர் எடப்பாடி குறித்து தினகரன் அவதூறாகப் பேசுவதால் நாங்களும் பேச வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால், தனிப்பட்ட முறையில் நான் அவரை தாக்குவது என் மரபு கிடையாது. எடப்பாடி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு 21 சட்டமன்ற இடைத்தேர்தல் எங்களுடைய இலக்கு’’ எனத் தெரிவித்தார்.


[X] Close

[X] Close