`ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு உதவியது தி.மு.கதான்!’ - அமைச்சர் கடம்பூர் ராஜு | The DMK has done all the support for the Sterlite plant expansion accuses minister kadambur raju

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/03/2019)

கடைசி தொடர்பு:22:00 (05/03/2019)

`ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு உதவியது தி.மு.கதான்!’ - அமைச்சர் கடம்பூர் ராஜு

``ஸ்டெர்லைட் ஆலை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கண்டது அ.தி.மு.க., அரசுதான். ஆனால், ஆலைக்கு அத்துணை உதவிகளும் செய்தது தி.மு.க அரசுதான். இதற்கெல்லாம் உத்தரவாக அரசின் நகலை பத்திரிகையாளர் சந்திப்பில் கொண்டு வருகிறேன். மறுக்க அவர்கள் தயாரா?” எனச் செய்தித்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடம்பூர் ராஜு

கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.2.60 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு புதிய கட்டட கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கோவில்பட்டி நகராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் ரூ.50.67 லட்சத்தில் வாங்கப்பட்ட 9 இலகு ரக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ``முந்தைய 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில்,  2021-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலுக்குக் கொண்டு வரப்படும் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அதேபோல, 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. படிப்படியாகக் குறைக்கப்படும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியப்படும்.

அமைச்சர் கடம்பூர் ராஜு

இரட்டை இலைச் சின்னம் கேட்டு எத்தனை முறையீட்டுக்குச் சென்றாலும், அ.தி.மு.க பெயர், கொடி எங்கிருக்கிறதோ அங்குதான் சின்னம் வரும். இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குதான் சொந்தம். ஸ்டெர்லைட் ஆலை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கண்டது அ.தி.மு.க., அரசுதான். ஆனால், ஆலைக்கு அத்தனை உதவிகளும் செய்தது தி.மு.க., அரசுதான். கடந்த 1996-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை திறக்கும்போது தி.மு.க ஆட்சிதான் இருந்தது.

கடந்த 2007-ம் ஆண்டு 245 ஏக்கர் அந்த ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்தபோது தற்போதைய எதிர்க்கட்சி தலைவர்தான் அன்று தொழில்துறை அமைச்சராக இருந்தார். இதற்கெல்லாம் உத்தரவாக அரசின் நகலை, அடுத்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது கொண்டுவரத் தயாராக நான் இருக்கிறேன். அதை மறுப்பதற்கு அவர்கள் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close