நாஞ்சில் சம்பத்தின் இரட்டைப் பேச்சு... அதிர்ச்சியில் தி.மு.க தொண்டர்கள் | nanjil sampath speach dmk party in shock

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (06/03/2019)

கடைசி தொடர்பு:11:35 (06/03/2019)

நாஞ்சில் சம்பத்தின் இரட்டைப் பேச்சு... அதிர்ச்சியில் தி.மு.க தொண்டர்கள்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். அப்போது, மேடையில் இதற்கு முன் அ.தி.மு.க கூட்டத்தில் பேசிய அதே வார்த்தைகளை மாற்றிப் பேசி தி.மு.க-வுக்குப் புகழாரம் சூட்டினார். கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க-வை இதே வார்த்தைகளால் புகழ்ந்த நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சு என்று தற்போது இணையத்தில் வீடியோக்கள் பரவி வருகிறது. தி.மு.க தொண்டர்கள் இந்தக் காணொலியைப் பார்த்து நொந்து போயுள்ளனர். சிலர் ஏன்தான் நாஞ்சில் சம்பத்தை விழாவுக்கு அழைத்தார்களோ என்றும் புலம்புகின்றனர்.

நாஞ்சில் சம்பத்

 

கடந்த தேர்தலில், அ.தி.மு.க கட்சிக்காக நாஞ்சில் சம்பத் பேசியது என்ன? 

``திமுக தரகுக்கடை; அ.தி.மு.க தமிழர்களின் கோட்டம்.

 தி.மு.க வர்த்தகப் பண்ணை; அ.தி.மு.க வித்தகப் பாசறை.

 தி.மு.க தேர்தலுக்காகவும் கலெக்‌ஷனுக்காகவும் இருக்கும் கட்சி; அ.தி.மு.க சேவைக்காகவும் தியாகத்துக்காகவும் இருக்கும் கட்சி. 

தி.மு.க முத்தக் காட்சிகளால் நிரம்பிய கூடாரம்; அ.தி.மு.க ரத்தக் காட்சிகளால் வியாபிக்கப்பட்ட மாளிகை. 

அ.தி.மு.க ஏழை, எளியத் தொண்டர்களின் கண்ணீராலும் ரத்தத்தாலும் கட்டப்பட்ட மாளிகை" என்று பேசியிருந்தார்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத் பேசியதாவது, 

``தி.மு.க எலெக்‌ஷனுக்காகவும் கலெக்‌ஷனுக்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட கட்சி அல்ல. இது சேவைக்காகவும் தியாகத்துக்காகவும் இருக்கும் இயக்கம். 

இது வர்த்தகப் பண்ணை அல்ல; வித்தகப் பாசறை.

இது தரகுக் கடை அல்ல; தமிழர்களின் கோட்டம். 

இது முத்தக் காட்சிகளால் நிரம்பிய கூடாரம் அல்ல, ரத்தக் காட்சிகளால் வியாபிக்கப்பட்ட மாளிகை என்று பேசினார்.

நாஞ்சில் சம்பத்தின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் கேலிக் கூத்தாகப் பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close