தண்ணீருக்காக குட்டிகளுடன் தொட்டியில் விழுந்த தாய்க் கரடி!- 10 மணி நேரம் போராடிய வனத்துறை | Mother bear rescued by Forest department

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (06/03/2019)

கடைசி தொடர்பு:12:20 (06/03/2019)

தண்ணீருக்காக குட்டிகளுடன் தொட்டியில் விழுந்த தாய்க் கரடி!- 10 மணி நேரம் போராடிய வனத்துறை

தண்ணீர் தொட்டியில் குட்டிகளுடன் விழுந்த கரடி

தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் தொட்டியில் விழுந்த 3 கரடிகளை பத்து மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு ஏணி மூலம் வனத்துறையினர் மீட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. யானை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி அலைகின்றன. வனப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. வனப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளிலும் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள  சிங்காரா வன பகுதி பொக்காபுரத்தில் உள்ள தனியார்  தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் குடிக்க வந்த தாய்க் கரடியும் அதன் 2 குட்டிகளும் தொட்டிக்குள் இறங்கி உள்ளன. ஆனால், தொட்டியில் தண்ணீர் இல்லாததால் கரடிகள் தொட்டியைவிட்டு வெளியில் வர முயன்றும் வெளியேற முடியாததால் பல மணி நேரம் போராடி உள்ளது.

தொட்டியில் போராடும் கரடி

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சிங்காரா வனத்துறையினர் கரடிகள் தொட்டியிலிருந்து வெளியில் வர வசதியாக ஏணியை தொட்டிக்குள் வைத்தனர். தொட்டிக்குள் வைக்கப்பட்ட ஏணியில் ஏறி கரடிகள் மூன்றும்  தொட்டியிலிருந்து வெளியேறின. சுமார் பத்து மணி நேரம் தண்ணீர் தொட்டிக்குள் சிக்கிக்கொண்ட கரடிகளை ஏணி மூலம் வனத்துறையினர் சுலபமாக மீட்டனர்.


[X] Close

[X] Close